எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் 88 வயது வெள்ளூர் வீராசாமி வயது மூப்பு காரணத்தால் காலமானார்.


தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெள்ளூர் வீராசாமி (88) வயது மூப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று உயிரிழந்தார்.
அவர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்தவர். அப்போது உணவுத் துறை மற்றும் வணிகவரி துறை அமைச்சராகப் பணியாற்றி அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்தால் குறிப்பிடத்தக்கவர் ஆனார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்த அவர், கட்சித் தொண்டர்களிடையே மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தார்.
ஒரத்தநாடு அருகிலுள்ள வெள்ளூர் கிராமத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு, அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த வெள்ளூர் வீராசாமியின் இறுதி ஊர்வலம் நாளை மதியம் நடைபெற உள்ளது.
நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர் தலைவர் நல்லகண்ணு – பிரேமலதா விஜயகாந்த்


