எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் உலகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், இந்தியா முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.115 உயர்ந்துள்ளது, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ரூ. 60ம் உயர்வை கண்டுள்ளது.
புதிய விலைபட்டியலின் படி சென்னையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்,928.50 ரூபாக்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் 2043.50ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இதுவரை ரூ. 869-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர், இனி ரூ.929 விற்பனை செய்யப்படும். இதேபோன்று, வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டு, சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ.2,044-க்கும், டெல்லியில் ரூ.1,883 மற்றும் மும்பையில் ரூ.1,835 யாகவும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் ரூ.30 விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்ட இந்த திடீர் உயர்வுடன் சேர்த்து ஒரே வாரத்தில் வணிக சிலிண்டரின் விலை ரூ.145 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழல் காரணமான இந்த திடீர் விலை ஏற்றம் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்ற கவலை எழுந்துள்ளது.
