Homeசெய்திகள்மாவட்டம்ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

-

- Advertisement -

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த, பறக்கும் படையினர் அதிரடி சோதனை.ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடிதமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பறக்கும் படை டீம் பி பார்த்திபன் தலைமையிலான குழுவினர் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாவரம் பகுதியில் நேற்று இரவு வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

we-r-hiring

அப்போது அதே பகுதியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பறக்கும் படையினர் அங்கு சென்று சோதனையிட்டபோது அங்கு வினியோகம் செய்து கொண்டிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அதனை தொடர்ந்து ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள் மற்றும் சேலைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். அதனை ஆற்காடு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகாம்பரத்திடம் ஒப்படைத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர்கள் விசாகரன், ராமு மற்றும் வருவாய்த்துறையினர் உறவினர் இருந்தனர்.

பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் போர் முழக்கம் …

MUST READ