தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் நிறைவடைந்த நிலையில், பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளாா். மீதமுள்ள 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அன்புமணி அறிவித்துள்ளாா்.

வெளியிடப்பட்டுள்ள 3 வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் – பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்,
அம்பத்தூர் – கே.என்.சேகர்,
செஞ்சி – பாமக முன்னாள் இளைஞரணி கணேஷ்குமர் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்
