Homeசெய்திகள்சென்னைதிருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் - முதல்வர் வாழ்த்து

திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் – முதல்வர் வாழ்த்து

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் திமுக பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் - முதல்வர் வாழ்த்துதிருவொற்றியூர் பகுதியில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் திமுக பகுதி அலுவலகத்தில் திமுக பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருவெற்றியூர் திமுக கிழக்கு பகுதி  அலுவலகத்தில் பகுதி செயலாளர் தனியரசுவை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்ற சுந்தர்ராஜன், “திருவொற்றியூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் வாழ்த்தி அனுப்பியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

திருவொற்றியூர் தொகுதியில் எந்த குறையும் கிடையாது. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கின்றேன் என்று முதலமைச்சர்   மிகவும் இயல்பாகவும், அதிக நேரமும் பேசினார். அது மிகுந்த மகிழ்ச்சி  அளிக்கிறது என்று கூறினார். நடக்க இருக்கின்ற தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான சாதாரண தேர்தல் அல்ல. பிஜேபி என்ற பிசாசை தமிழ்நாட்டை விட்டு துரத்த வில்லை என்றால் நாட்டுக்கு ஆபத்து. தமிழ்நாடு தான் டெல்லிக்கு சவாலாக இருக்கிறது. திராவிட மாடலாட்சி 2.0 தொடர வேண்டும்.  2வது முறையாக தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதற்கான தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக வெளிவந்துள்ளது. ஏற்கனவே சொன்னதை செய்துள்ளார் நமது முதல்வா். எதை செய்ய முடியும் எதை செய்தால் சாத்தியம் என்ற முறையிலும் அவர் சொல்லியிருக்கிறார்.

we-r-hiring

நிச்சயமாக நான் சாதாரண காண்ட்ராக்ட் தொழிலாளி எனது அமைப்பு எனக்கு அந்தஸ்தை கொடுத்து உயர்த்தி உள்ளது. மணலியில்  ஆரம்ப காலத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளியாக உரிமைகளுக்காக போராடி வளர்ந்தவன். திமுக மாவட்ட செயலாளர்கள் பகுதி நிர்வாகிகள் என்னை எப்பொழுதுமே நன்றாக கண்காணிப்பார்கள். இந்த தொகுதி கிடைக்குமா என்று நான் நினைக்கவே இல்லை. ஐந்து தொகுதி நாங்கள் கேட்டது எங்களை போட்டியிட சொல்லி நாங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். திராவிட முன்னேற்ற கழக கோட்டை இது வலுவான கோட்டை. நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது. சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் அதிக வாக்குகள் பெற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர்ராஜன், “திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராக திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றேன். சட்டப்பேரவை தேர்தல்  தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் போர். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது பல்வேறு திட்டங்களுக்கான நிதிகள் மறுக்கப்படுகின்றன. கல்வி மெட்ரோ ரயில் திட்டம் பணிகளுக்கு நிதிகள் மறுக்கப்படுகின்றன. 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்து அதற்கான நிதியும் கொடுக்க மறுக்கிறார்கள். இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நிலவுகின்ற நிலையில் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைத்து மாநில உரிமையை மாநில சுயாட்சியை ஓடுகின்ற போராட்டத்தை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திக் கொண்டிருக்கிறது. நாங்கள் உறுதுணையாக இருக்கின்றோம்.

தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ கடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை நடைமுறைப்படுத்தியதால் மக்களிடையே இந்த தமிழக அரசின் மீது ஆதரவு மிக அளவில் பெருகி உள்ளது. எதை செய்ய முடியுமோ எதை செய்யக்கூடிய சாத்தியமாக இருக்கிறதோ அதை கூறி இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் வரவேற்பை பெற்றுள்ளது. திருவொற்றியூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை அப்படி இருக்கும் பொழுது அதிமுக எப்படி வெற்றி பெற முடியும். அவர்கள் மூன்றாவது இடத்தில் தள்ளப்படுவார்கள்.  திருவொற்றியூர் தொடர்ந்து திமுகவின் கோட்டையாக கூட்டணி கட்சிகளின் வெற்றியாக திகழும். திருவொற்றியூர் தொகுதியில் சுற்றுச்சூழல் மற்றும்  மக்களின் குடிநீர் அடிப்படை தேவைகள் ஏற்கனவே அரசு செய்து கொண்டிருக்கிறது மேலும் மேம்படுத்தி தருவதற்கான பணிகள்செய்து தரப்படும்“ என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணிக்கு 100 சதவீதம் மக்கள் வெற்றியை தர வேண்டும் – முதல்வர்

MUST READ