Homeசெய்திகள்சென்னைரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

-

- Advertisement -

சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும், ஜேப்பியார் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சரண்யா தனபாலன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்மறைந்த ஜேப்பியார் கல்விக் குழும தலைவர், ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும்  இருந்துள்ளார். அவர் மறைந்த பின் ஜேப்பியார் மனைவி ரெமிபாய்க்கு சொத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜேப்பியார் சிமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை, போலி ஆவணங்கள் மற்றும் கையெழுத்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அபகரித்ததாக, அதன் மேலாண் இயக்குநர் ஜெயக்குமார் கிறிஸ்டுராஜன் பாபு மனோகரன் உட்பட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

​மறைந்த  ஜேப்பியாரின் மனைவியும், அந்நிறுவனத்தின் அசல் பங்குதாரருமான ரெமிபாய் ஜேப்பியார் (81)  சார்பில், அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதி டாக்டர் என்.கண்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இந்தப் புகாரை அளித்துள்ளார்.

we-r-hiring

​​ ஜேப்பியார் 2016-ல் மறைந்த பிறகு, ரெமிபாய் ஜேப்பியார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, நிறுவனத்தில்  சேர்ந்த சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் தலைவர் பாபு மனோகரனின் மகன், ஜே பி ஆர் இன் பேரன் ஜெயக்குமார் கிறிஸ்துராஜன் என்பவர், எவ்வித பங்குதாரர் ஒப்புதலும் இன்றி தன்னைத்தானே இயக்குநராகவும், பின் மேலாண் இயக்குநராகவும் தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.

​ரெமிபாய் ஜேப்பியாரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, அவருக்குச் சொந்தமான 120 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,28,000 பங்குகளைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் நலிவடைந்ததாகக் காட்டி, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை  தவறாக வழிநடத்தி நிறுவனத்தைக் கலைப்பு  நடவடிக்கைக்கு உள்ளாக்கினார். நிறுவனத்தின் பெயரில் எச்டிஎப்சி (HDFC) வங்கியில் ரூ. 1.5 கோடி வாகனக் கடன் பெற்று, அந்தப் பணத்தை நிறுவனத்திற்குப் பயன்படுத்தாமல் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

மேலும், முறையான அனுமதி இன்றி ரூ. 48 லட்சம் ஊதியமாகப் பெற்றுள்ளார். ​காலாவதியான சுரங்க உரிமத்தைப் பயன்படுத்தி முறையற்ற குவாரி தொழிலில் ஈடுபட்டது, மின்சார வாரிய ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்தது மற்றும் போலி இருப்புநிலை குறிப்புகளை  தாக்கல் செய்து வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி துறையினரை ஏமாற்றியது போன்ற குற்றச்சாட்டுகளும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

​இந்த மோசடிகளுக்கு ஜெயக்குமாரின் உறவினர்களான மருத்துவர் சரண்யா தனபாலன், சண்முகசூர்யா, லட்சுமி மற்றும் சுசீலா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் ஆடிட்டர் ஆர். பழனிசாமி என்பவர் இந்த முறைகேடான ஆவணங்களுக்குத் துணை நின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.​

​இந்த விரிவான புகாரைப் பரிசீலித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு  பிரிவுகள் போலியாவணங்கள் தயாரித்தல் மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரபல ஜேப்பியார் குழுமத்தின் தொடர்புடைய  சுமார் ரூ. 122 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் பங்குகள் சென் ஜோசப் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மகனும்,ஜேப்பியார் பேரன் மற்றும் மனைவி  உட்பட ஆறு பேர் போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக சென்னை காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

MUST READ