Homeசெய்திகள்சென்னைதிமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் - ராஜா அன்பழகன் பேட்டி

திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் – ராஜா அன்பழகன் பேட்டி

-

- Advertisement -

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தி நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் புத்துயிர் பெறும் என ராஜா அன்பழகன் பேட்டியளித்துள்ளாா்.திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரிலிருந்து தொடங்கும் - ராஜா அன்பழகன் பேட்டிசென்னை தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளராக, அந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அன்பழகனின் மகன் “ராஜா அன்பழகன் போட்டியிடுகிறார். தியாகராய நகர் சிஐடி நகர் செங்கன்னி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுக ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரசாரத்தின் போது ராஜா அன்பழகன் அளித்த பேட்டியில், “அதிமுக ஆட்சியில் டி நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றன. திராவிட மாடல் ஆட்சி 2.0 மீண்டும் அமைந்த பிறகு தி நகர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் புத்துயிர் பெற்று பல்வேறு நவீன  கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். திராவிட மாடல் ஆட்சியில் நலத்திட்டங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் கிடைத்துள்ளது. அது தொடர திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என மக்களிடம் எடுத்துரைப்போம். வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார். அந்த வகையில் திமுகவின் முதல் வெற்றி தியாகராய நகரில் இருந்து தொடங்கும் என ராஜா அன்பழகன் தெரிவித்தார்.

ரூ. 122 கோடி மோசடி: “ஜேப்பியார் சிமெண்ட்ஸ்“ நிறுவனத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார்

we-r-hiring

MUST READ