அரசியல் வரலாற்றில், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளை வீழ்த்தி, புதிய கட்சிகள் அல்லது இயக்கங்கள் திடீரெனத் தோன்றி ஆட்சியைப் பிடித்தது என்பது உலகெங்கும் பலமுறை நிகழ்ந்துள்ளது.இத்தகைய மாற்றங்கள் பெரும்பாலும் மக்களின் அதிருப்தி, பொருளாதார வீழ்ச்சி அல்லது ஊழலுக்கு எதிரான எழுச்சியால் உண்டாகின்றன.
பிரான்ஸில் ‘ஆன் மார்ச்!’ En Marche என்பவர் கடந்த 2016-ல் இம்மானுவேல் மக்ரோன் ‘En Marche!’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார். பிரான்சில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திய இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகளை ஓரங்கட்டி, ஓராண்டுக்குள்ளேயே அதிபரானார். பாரம்பரிய அரசியல் கட்டமைப்பை உடைத்து, மத்தியவாத (Centrist) கொள்கையை முன்வைத்து வெற்றி பெற்றார்.
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி 2011-ல் ஆட்சியை பிடித்தார். இந்த கட்சி டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு பெரும் சக்திகளையும் வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. இது ஒரு வரலாற்று நிகழ்வு.

“சாதாரண மனிதன்” (Common Man) அரசியலையும், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளையும் முதன்மை அரசியலாக மாற்றி அதிகாரத்தை கைப்பற்றியது.
தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வருகிறது. அந்த உக்ரைன் அதிபர் மக்கள் சேவகன் (Servant of the People) என்ற கோஷத்தை முன்வைத்து, ஒரு நகைச்சுவை நடிகராக இருந்த ஜெலென்ஸ்கி, ஒரு தொலைக்காட்சித் தொடரில் அதிபராக நடித்தார். அந்தத் தொடரின் பெயரிலேயே கட்சியைத் தொடங்கி, 2019-ல் நிஜமாகவே உக்ரைனின் அதிபரானார்.
ஊழலால் புரையோடிப் போயிருந்த பழைய அரசியல்வாதிகளை மக்கள் முற்றிலுமாக நிராகரித்தார்கள். அரசியல் ஆய்வாளர்கள் இத்தகைய மாற்றங்களை மூன்று முக்கியக் கோணங்களில் பார்க்கிறார்கள். புதிய கட்சிகளின் வருகை தேக்கமடைந்த ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளிக்கிறது. இது ஆளும் வர்க்கத்தினருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்து, அவர்களைப் பணியாற்றத் தூண்டுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பல நேரங்களில் இத்தகைய மாற்றங்கள் ஒரு தனிநபரின் கவர்ச்சிகரமான பேச்சால் அல்லது பிம்பத்தால் (Charisma) நிகழ்ந்து விடுகிறது. கட்சியின் கொள்கைகளை விட அந்தத் தனிநபரின் மீதே மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர். (உதாரணம்: மக்ரோன், ஜெலென்ஸ்கி).
புதிய கட்சிகள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆட்சியைப் பிடித்துவிட்டாலும், அனுபவமின்மையால் நீண்ட காலத்திற்குத் திறம்பட நிர்வாகம் செய்ய முடியுமா? என்ற கேள்வி ஆய்வாளர்களிடையே எப்போதும் உண்டு. சில கட்சிகள் காலப்போக்கில் பழைய கட்சிகளைப் போலவே மாறிவிடுவதாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகிறது.
அரசியல் களம் என்பது எப்போதும் தேங்கி நிற்பதல்ல. மக்கள் எப்போது தங்களின் குரல் ஒடுக்கப்படுவதாக உணர்கிறார்களோ, அப்போது ஒரு புதிய மாற்று சக்தி உருவாவது உலக நியதி. அது ஒரு புரட்சியாகவோ அல்லது தேர்தல் வெற்றியாகவோ வெளிப்படலாம்.
”மாற்றம் என்பது ஒரு நபரால் வருவதல்ல, அது ஒரு சமூகத்தின் கூட்டுத் தேவையால் விளைவது.” என்பதுதான் அரசியல் வரலாறு நமக்குக் கூறும் பாடம்.
ஈரானின் முக்கியத் தலைவர்கள் படுகொலையும், நேருவின் தொலைநோக்குப் பார்வையும்
