Homeசெய்திகள்சென்னைகொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் - ஆர்.எஸ்.பாரதி

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

-

- Advertisement -

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் - ஆர்.எஸ்.பாரதி  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு மக்கள் கொடுக்கக்கூடிய வரவேற்பை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாமல் எடப்பாடி வயிற்று எரிச்சலில் உலரிக்கொண்டு இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும்; ஒரு தலைவர் எப்படி பேச வேண்டும் என்ற இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை எல்லாம் உணராமல் தரம் தாழ்ந்து மிக கேவலமாகவும் மனித சமுதாயத்திற்கு புறம்பான பேச்சுகளை இன்று எடப்பாடி பேசி வருகிறார் என்றார். அதனுடைய உச்சகட்டமாக தான் தலைவர் ஸ்டாலினை பற்றி கீழ்தரமாக பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் கொரோனா காலத்தில் நாடு எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்டார்.

we-r-hiring

திமுக ஆட்சி வந்த பின்னர் கொரொனாவை கட்டுப்படுத்தினார் என்பது நன்றாக தெரியும். கொரொனா காலத்தில் எடப்பாடி வெளியவே வர பயந்த நிலையில் முதலமைச்சர் வெளியில் வந்து மருத்துவமனைக்கு சென்று அனைவரையும் சந்தித்தார். இதை மூடி மறைக்க எவ்வளவு வாய் கொழுப்பு இருந்தால்; திமிரு இருந்தால் கொரோனாவில் போய் சேர்ந்து இருப்பார் என்று பேசி இருப்பார் என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினர்.

இது ஒன்று புதிதல்லை. கொலை கொள்ளை எல்லாம் எடப்பாடிக்கு கை வந்த கலை. நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது புத்தி போகாது; அது போன்று எடப்பாடியின் கொலைவெறி இன்னும் போகவில்லை என்பதை நேற்றைய தினம் அவருடைய பேச்சின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். இவருடைய கதைகள் எல்லாம் பேச ஆரம்பித்தால் பல கதைகள் வரும் இப்போதுதான் சாத்தான்குளம் கொலை வழக்கு நிறைவடைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் நீங்கள் மறைத்து வழக்கிற்கு தற்போது அனைவருக்கும் மரண தண்டையில் வழங்கப்பட்டுள்ளது.

ரோட்டில் சுற்றிக்கொண்டிருந்த அவர்களுக்கு எல்லாம் அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா. அவருடைய கொடநாடு கொலை வழக்கு நகைகள் எல்லாம் பறிபோனது யாருடைய காலத்தில்  என்பதோடு எடப்பாடி காலத்தில் நான்கு கொலைகள் நடந்துள்ளது அது பற்றி விசாரணை நடந்து கொண்டுள்ளது.

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வழங்கப்பட்டதோ அதேபோன்று  கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வரும் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும். தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இதை எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெறப் போகிறது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வரும் என்பதை உளவுத்துறை மூலமாக தெரிந்து கொண்டு அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வைக்கு எரிச்சல் காரணமாக எடப்பாடி இதுபோன்று பேசி வருகிறார். இவ்வளவு மலிவான அரசியல் இதுவரை தமிழகத்தில் நடந்தது இல்லை.

காமராஜரை பற்றி வரலாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது. காமராஜருக்கு செய்தது அனைத்தும் திமுக தான். உயிரோடு இருந்த காமராஜருக்கு முதல் முதலாக அண்ணாசாலையில் சிலை வைத்தது காங்கிரஸ் அல்ல; திமுக ஆட்சி தான். காமராஜர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் இன்று பாஜகவாக இருப்பவர்கள். அன்று ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தார்கள். குடியாத்தத்தில் கோதடைபாணி என்ற திமுககாரர்தான் அன்று காமராஜர் வீட்டில் தீ வைத்த போது அவரை காப்பாற்றியது.

காமராஜரை கைது செய்யாததால் தான் திமுக ஆட்சியை கலைக்கப்பட்டது. காமராஜர் இறந்தபோது சத்தியமூர்த்தி பவன் மற்றும் மற்ற இடங்களில் அவருடைய உடல் அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள். ஆனால் காமராஜர் காலம் முழுவதும் காந்தியவாதியாக இருந்தார். அதன் காரணமாகவே காந்தி மண்டபம் அருகில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.

காமராஜருக்கு கொல்லி வைக்கும் குறையை கருணாநிதி தீர்த்து வைத்தார் என்று காங்கிரஸ் கட்சியினரை தெரிவித்தார்கள். எம்.ஜி.ஆருக்கும், ஜானகிக்கும் திருமணம் செய்து வைத்ததே கலைஞர் கருணாநிதி தான். இது எடப்பாடிக்கு தெரியுமா? அல்லது அவருடைய கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியுமா? இன்று இருக்கும் அதிமுக கட்டிடம் யாருக்கு சொந்தமானது எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்ல வேண்டும். அதிமுக அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகை எம்.ஜி.ஆர் கூட சொந்தம் அல்ல, ஜானகி அவர்களுக்கு சொந்தமானது.

ஜானகி அம்மா மேல் பாசம் இருந்தால் அவருடைய பெயரையும் அதிமுக அலுவலகத்தில் வைக்க வேண்டியது தானே. நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது அதிமுக அலுவலகத்தில் ஜானகி அவர்களுக்கு ஒரு சிலையாவது வைத்திருக்கிற வேண்டியதானே  என்று கேள்வி எழுப்பினார். எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாபுரம் இல்லம் சுடுகாடு போன்று உள்ளது இதுவரை ஜானகியமா நினைவு நாள் அல்லது பிறந்தநாள் அன்று ஒரு முறையாவது மலர் வளையம்  வைத்திருப்பார்களா? தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட தில்லுமுல்லான திருட்டுத்தனமான விஷயங்களை பேசி வருகிறார் எடப்பாடி என்றார். விஜய் குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளாா்.

ஆதரவற்ற குழந்தையாகிவிட்டது அதிமுக…அன்போடு அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின் – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

 

MUST READ