Homeசெய்திகள்மாவட்டம்அபிஷேக் தீக்சித் நியமனத்திற்கு எதிர்ப்பு…. திமுக கூட்டணி கட்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

அபிஷேக் தீக்சித் நியமனத்திற்கு எதிர்ப்பு…. திமுக கூட்டணி கட்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

-

- Advertisement -

மதுரை மாநகர காவல் ஆணையராக அபிஷேக் தீக்சித் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.அபீஷேக் தீட்சித் நியமனத்திற்கு எதிர்ப்பு…. திமுக கூட்டணி கட்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இது குறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில், மாநகர காவல் ஆணையர்  லோகநாதன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக  அபிஷேக் தீக்சித் ஐபிஎஸ் (தமிழ்நாடு 2006) அதிகாரி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அபிஷேக் தீட்சித் மீது சுமத்தப்பட்டுள்ளதோடு, நிர்வாக ரீதியாக நடவடிக்கைகளுக்கும் அவர் உள்ளாகியிருக்கிறார்.

we-r-hiring

அபிஷேக் தீட்சித், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளராகவும், பின்னர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் மூத்த காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய இரண்டு பதவிக் காலங்களிலும் ஊழல் தடுப்பு வழக்குகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கிறார். குறிப்பாக, இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றார் எனும் குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்துள்ளன.

மேலும் இடமாற்றங்கள் மற்றும் பதவி நியமனங்களில் ஊழல், மோசமான குற்றச்சாட்டுகள் மற்றும் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காகவும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆளான ஒருவரை மதுரைக்குப் பணியிட மாற்றம் செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இத்தகைய ஒரு அதிகாரியை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால், அது நியாயமான, வெளிப்படையான தேர்தல் பணிகளைப் பெருமளவு பாதிக்கும் எனவே, அபிஷேக் தீட்சித்தை  பணி மாற்றல் உத்தரவை உடனடியாக ரத்து செய்வதோடு, ஏற்கனவே பணியில் இருந்த லோகநாதன்,  இப்பணியில் நீட்டிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்தாக சிபிஎம் மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்துள்ளாா்.

தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக இருக்கக் கூடாது – செல்வப்பெருந்தகை

MUST READ