Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார் - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார் – செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

-

- Advertisement -

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அவருக்கு திமுக மற்றும் துணை முதல்வர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணம் என  செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளாா்.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசி வருகிறார் - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுகோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோட்டைமேடு மற்றும் பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று மக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், பெண்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்றார்.

பிரச்சாரத்தின் போது பேசிய செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் சிரித்த முகத்துடன் வரவேற்கும் நிலை காணப்படுவதற்கு காரணம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களே என அவர் குறிப்பிட்டார். மேலும், மீண்டும் மக்களை வீடு தோறும் சந்தித்து அவர்களின் ஆதரவை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்தார்.

we-r-hiring

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, திமுக ஆட்சி மீண்டும் வந்தால் மாநிலத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற கருத்து ஆதாரமற்றது என மறுத்தார். திமுகவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவிகள் குறித்து அவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோன்று, மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த அவர், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி போதுமான அளவில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இருப்பினும், பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது மத்திய அரசின் தரவுகளிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கூறப்பட்ட டபுள் இன்ஜின் சர்க்கார் எந்த முக்கிய வளர்ச்சி திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், திமுக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கும் அண்ணாமலை மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரின் கருத்துக்கள் அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, அறிவாலயத்தின் அடி செங்கல் வரை உருவுவேன் என்று கூறப்பட்ட சர்ச்சையான கருத்துகளை நினைவுபடுத்திய செந்தில் பாலாஜி, அந்த கருத்தை வெளியிட்ட நபரின் பதவி நீக்கப்பட்டிருப்பது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். மொத்தத்தில், திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற உறுதியுடன் தனது பிரச்சாரத்தை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

MUST READ