Homeசெய்திகள்மாவட்டம்அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 3.5 கோடி ரூபாய் சேதம்…

அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3.5 கோடி ரூபாய் சேதம்…

-

- Advertisement -

வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில். போர் பதற்றத்தால் மூல பொருட்கள் விலை  உயரும் என  கூடுதலாக சேமித்து வைத்த  பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்கள், ரசாயன கெமிக்கல்கள் தீயில் ஏரிந்தது நாசமாகியுள்ளது. சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 3.5 கோடி ரூபாய் சேதம்…

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த அச்சக பயன்பாட்டு வண்ண மை தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தொழிற்சாலை, ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமானது.

we-r-hiring

சம்பவம் நடந்த போது, தொழிற்சாலையில் இருந்து திடீரென கரும்புகை எழுந்ததை கவனித்த அருகிலுள்ள மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த தீ வேகமாக பரவி தொழிற்சாலை முழுவதையும் சூழ்ந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவல் கிடைத்தவுடன் அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், மணலி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், 40-க்கும் மேற்பட்ட வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலையில் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்கள் மற்றும் ரசாயன கெமிக்கல்கள் தீயில் எரிந்ததால் சேதம் அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் முற்றிலும் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து அம்பத்தூர் எஸ்டேட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சென்னை பெருநகர மாநகராட்சி 7வது மண்டல சேர்மேன் பி.கே. மூர்த்தி மற்றும் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் பூர்ணிமா ஆகியோர் நிலைமையை பார்வையிட்டு, தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அடிதடியில் இறங்கிய தவெக ஒன்றிய செயலாளர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

MUST READ