நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா சீத்தாராமன் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.
இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதுாவது, ”மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே, கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், “நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்” எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறீர்கள்.
தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளாா்.
இந்த விவகாரம் விவசாயிகளின் நலன் மற்றும் மாநில அரசுகளின் கொள்முதல் அதிகாரம் தொடர்பான அரசியல் விவாதமாக மாறியுள்ளது, இதில் ஸ்டாலின் – நிர்மலா சீதாராமன் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்
