ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக கசியவிட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் மூவரை மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இத்திரைப்படத்தை பதிவேற்றம் செய்து பரப்பியதாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் மூவர் சிக்கியுள்ளனர்.
விரிவான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் டிஜிட்டல் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நேற்று இந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் முதன்மைக் குற்றவாளி, வேறொரு திரைப்படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றி வருபவர். இவர், ஜனநாயகன் திரைப்படம் எடிட்டிங் செய்யப்பட்ட ஸ்டுடியோவிற்குள் முறையற்ற வகையில் நுழைந்து, அந்தத் திரைப்படத்தின் காட்சிகளை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு திருடப்பட்ட தரவுகளைத் திரைப்படமாக மாற்றி, மற்ற கூட்டாளிகளுக்கு அனுப்பி, இணையத்தில் பரப்பியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதித்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சைபர் குற்றப்பிரிவின் இந்த அதிரடி நடவடிக்கை, திரைப்படத் திருட்டு மற்றும் டிஜிட்டல் தரவுத் திருட்டில் ஈடுபடுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான விவகாரத்தின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். Freelancer Assistant Visual Editor மூலமாக ஜனநாயகம் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் கசிந்தது மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். Freelancer Assistant Visual Editor மூலமாக அவரது நண்பர்களுக்கும் கிளவுட் ஸ்டோரேஜ்க்கும் அனுப்பப்பட்டு அதன் மூலம் சமூக வலைதளங்களில் கசிந்தது மாநில சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை முக்கிய குற்றவாளியையும் சேர்த்து 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயகன் லீக் விவகாரம்… திரைப்படத்தின் ரகசியத்தைக் காக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள்…
