Homeசெய்திகள்அரசியல்அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் - நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

-

- Advertisement -

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் - நீதிமன்றத்தில் வழக்கு அதிமுகவுக்கு வாக்களித்தால் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் செக் விநியோகம் செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சுந்தர வடிவேல் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேர்தலை ஒட்டி ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகித்து அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வாக்களித்தால் பணபலன்கள் கிடைக்கும் என்பது போல தோற்றத்தை ஏற்படுத்துவது போல துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாகவும், இது வாக்காளர்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

மேலும் காசோலை போல அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை விநியோகிக்கப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுகொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் தலைமை அமர்வில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…

MUST READ