பாஜக – அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமியர் கிறிஸ்தவர் வாக்குகளைப் பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், விஜய்க்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு என நன்னிலம் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் நெல்லை முபாரக்கிற்கு ஆதரவு தெரிவித்து திருமாவளவன் எம்பி பேசியுள்ளாா்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி எரவாஞ்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டாா். எஸ்டிபிஐ, தேமுதிக, திமுக கூட்டணிக்கு வந்திருப்பது பலம் என்றும், முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர் வாக்குகள் தேவையில்லை என சொல்லும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து, இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஓட்டு தேவையில்லை என வெளிப்படையாக முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
விசிகவில் முஸ்லீம் கிறிஸ்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதாக குறிப்பிட்ட திருமாவளவன், இஸ்லாமியர்களை அரவணைத்துக் கொண்டவர் நமது முதல்வா். பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவை மறந்து விட்டு எடப்பாடியார், பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளாா். அதிமுக – பாஜகவால் திமுகவை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் விஜய்யை இறக்கிவிட்டிருப்பதாக கூறினாா்.

மேலும், திமுகவை ஏன் இவ்வளவு மூர்க்கமாக விஜய் எதிர்க்கிறார்? திமுகவை வீழ்த்தி விட்டு விஜய்யால் ஆட்சி அமைக்க முடியுமா? பெரம்பூரில் ஜெயிக்க முடியாது என்ற சந்தேகத்தால் திருச்சியில் நிற்கிறார். அவராலும் ஜெயிக்க முடியாது. அவர் வேட்பாளர்களாலும் ஜெயிக்க முடியாது. பாஜக – அதிமுக கூட்டணியை ஜெயிக்க வைப்பதே விஜய்யின் நோக்கம் என்றார். ஓட்டை பிரிக்கவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளார். முஸ்லீம், கிறிஸ்தவ ஓட்டுக்களை பாஜக கூட்டணி வாங்க முடியாது என்பதால், அந்த ஓட்டுக்களை பிரிப்பதற்காகவே விஜய் களமிறக்கப்பட்டுள்ளார்.
முஸ்லீம் இளைஞர்கள் சிலர் விஜய்க்கு வாக்கு சேகரிக்கின்றனர், இதுதான் மோடியின் திட்டம். இரட்டை இலை சின்னம் உணமையில் அது அதிமுக சின்னம் இல்லை, அது பாஜகவின் சின்னம். ஒருவேளை அதிமுக ஆட்சி அமைத்தால், நிதிஷ்குமார் மாதிரி எடப்பாடியை தூக்கி விட்டு ஹெச்.ராஜாவை முதலமைச்சராகிவிடுவார். வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்து விடுவர் என குறிப்பிட்ட திருமாவளவன், “பழைய அதிமுக, எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக இல்லை“ என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மோடி வித்தை தான் நிகழும், மோடி வித்தை என்பது மாநில கட்சிகளை அழிப்பது, அதிமுக அழிக்கப்படும். அதற்கு மஹாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்கள் உதாரணங்கள் என குறிப்பிட்டார்.
நிதிஷை கட்டாயப்படுத்தி எம்.பியாக்கி விட்டு இப்பொழுது பாஜக ஆட்சி பீகாரில் நடப்பதாக சுட்டிக்காடினார். அந்த நிலைதான் தமிழ்நாட்டில் உருவாகும். அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாஜக ஆட்சிக்கு வரும் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டால் பாஜகவைத்தான் வலுப்படுத்துகிறீர்கள் என அதிமுக தொண்டர்களுக்கு திருமாவளவன் தனது உரையின் தெளிவுப்படுத்த முயற்சித்தாா்.
முகம்மது முபாரக் வெற்றி பெற்றால், திருமாவளவன் வெற்றி பெற்றதாக அர்த்தம், முபாரக் சட்டசபைக்குச் சென்றால் திருமாவளவன் சட்டசபைக்குச் சென்றதாக அர்த்தம் என பேசி தனது உரையினை நிறைவு செய்தார். வாக்கு சேகரிப்பின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
“சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க வேண்டும்”- திருமாவளவன் எம்.பி.!
