ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இன்று (ஏப்ரல் 20, 2026) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தில் உள்ள கச்சா எண்ணெய் வடித்தல் பிரிவில் (Crude Distillation Unit – CDU) இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும், நிலைமை சீராக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த பிரம்மாண்டமான சுத்திகரிப்பு ஆலையைத் திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தார். இது இந்தியாவின் முதல் பசுமை எரிசக்தி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகமாகும்.
சுமார் ரூ.79,450 கோடி முதலீட்டில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா இன்று மாலை இந்த ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த விபத்து காரணமாக நாளை நடைபெறவிருந்த பிரதமர் வருகையில் அல்லது திறப்பு விழா அட்டவணையில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
