Homeசெய்திகள்அரசியல்கடந்த தேர்தலில் எனது தோல்விக்கு காரணம் பாஜக தான் – சுபேர்கான் குற்றச்சாட்டு

கடந்த தேர்தலில் எனது தோல்விக்கு காரணம் பாஜக தான் – சுபேர்கான் குற்றச்சாட்டு

-

- Advertisement -

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வியடைந்தேன். ஜெயகுமார் மீண்டும் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். அதனால் பாஜக கொடியை கூட பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதில்லை என சுபேர்கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.கடந்த தேர்தலில் எனது தோல்விக்கு காரணம் பாஜக தான் – சுபேர்கான் குற்றச்சாட்டுசட்டமன்றத் தேர்தலுக்கான இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. ராயபுரம் தொகுதிக்கு தனி தேர்தல் வாக்குறுதிகளை திமுக வேட்பாளர் சுபேர்கான் வழங்கினார். அதில், “திமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர் 2.0 ஆட்சிக்கு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். திமுக ஆட்சி மீண்டும் எப்போது வரும் என மக்கள் காத்திருக்கின்றனர். அதிகமான திட்டங்கள் தொகுதிக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் கூறுகின்றனர்.

மருத்துவராக இருப்பதால் மக்களை தேடி மருத்துவம் முழுவீச்சில், மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மருத்துவ உபகரணங்கள் மேம்படுத்தப்படும். குப்பைகள், கழிவு நீர் தேங்காத வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தரமான சாலை, நெரிசல் பகுதிகளில் மக்கள் சிரமம் இன்றி பயணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராயபுரத்தில் ரயில் முணையம் மேம்படுத்தப்படும். எம்.சி ரோடு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைந்து முடிக்கப்படும்.  மினி பேருந்துகள் இயக்கப்படும். பழைய குடியிருப்புகள் ஆய்வு செய்து சீரமைக்கப்படும். பொது கழிப்பிடங்கள் அமைத்து தொடர்ந்து சுகாதாரமான முறையில் கண்காணிக்கப்படும். காசிமேடு துறைமுகத்தில் நிழற்கூடை அமைக்கப்படும்.

we-r-hiring

மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த சிறப்பு திட்டங்கள், சிறப்பு நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும். மீன்கள் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும். 70 படகு மெக்கானிக்குகளுக்கு இட வசதி ஏற்பாடு செய்யப்படும். ஆண்டுக்கு 2 முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். நம்ம ராயபுரம் ப்ரீமியர் லீக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு தெருக்களுக்கும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்படும். மக்களை தேடி எம்.எல்.ஏ என்ற வார் ரூம் அமைக்கப்படும். மழைநீர் வடிகால் சீரமைக்கப்படும். அரசு சேவைகள் எளிதில் பெற இ சேவை மையங்கள் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார்.

தான் மருத்துவராக இருப்பதால் ராயபுரம் தொகுதியில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைகளின் தரம் மேலும் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.  அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் ராயபுரம் தொகுதியில் போலி செக் வடிவில் வழங்கி வருகிறார். தேர்தல் விதிமீறல்களுக்கு எதிராக ஜெயகுமார் செயல்படுகிறார். ஆர்.கே நகர் தொகுதியில் கடந்த காலத்தில் எப்படி 20 ரூபாய் டோக்கன்களை வழங்கினார்களோ, அதே போல போலி செக் வழங்கி வருகின்றனர்.

கடந்த தேர்தலில் எனது தோல்விக்கு காரணம் பாஜக தான் எனக் கூறிய ஜெயகுமார் மீண்டும் அதே பாஜகவுடன் தான் கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். ஆனால் பாஜக கொடி இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்” என திமுக வேட்பாளர் சுபேர் கான் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

40 ஆண்டு காலமாக தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டார் அமைச்சர் துரைமுருகன்

MUST READ