தமிழக சட்டப்பேரவைக்கு 13-வது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 40 ஆண்டு காலமாக தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டு அமைச்சர் துரைமுருகன் வீடியோ வெளியிட்டு பிரச்சாரம் செய்துள்ளாா்.
அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, “என் உயிருக்கு உயிரான காட்பாடி தொகுதி மக்களே, வணக்கம். வருகிற 23-ஆம் தேதி சட்டமன்றத்திற்கு தேர்தல். மீண்டும் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். சுமார் 40 ஆண்டுகாலத்திற்கு மேலாக என்னை உருவாக்கியவர்கள் நீங்கள். நின்ற பொழுதெல்லாம் பெரும்பாலும் வெற்றியைத் தந்தவர்கள் நீங்கள். அந்த வெற்றிக்குத் தக்கபடி இந்தத் தொகுதிக்கு உழைத்து வருகிறவன் நான்.
என்னுடைய சாதனைகள் சரித்திரத்தில் பதிவாகக்கூடியது. ஒன்றிரண்டைக் குறிப்பிடுகிறேன். 1971-இல் நின்ற பொழுது, பொன்னையாற்றில் வெள்ளத்திலே ஆறு மாதம், ஏழு மாதம் தண்ணீர் போகும். அப்பொழுது வண்டிகள் அந்தக்கரை இந்தக்கரைக்கு போகாது. அந்த நேரத்தில் இரண்டு பேர் நாலு பேர் உட்கார்ந்து கொண்டு ‘லெஃப்ட்ல திருப்புங்க, ரைட்ல திருப்புங்க’ என்று சொல்லி வண்டியைப் பள்ளத்தில் தள்ளி பின் தூக்கி விடுவதற்கு என்று 15 ரூபாய், 15 ரூபாய் கேட்பார். ஆக 30 ரூபாய் இல்லாமல் பொன்னையிலே போய் கூட்டம் பேசிட்டு வரமுடியாத நிலை.

அப்பொழுது நான் சொன்னேன், ‘எனக்கு வாக்களித்தால் இந்த இதற்கு நான் இந்த பிரிட்ஜைக் கட்டித் தருகிறேன்’ என்று. கலைஞர் கூட்டி வந்து, அதே பொன்னையிலே நிறுத்தி, அடிக்கல் நாட்டி, அந்தப் பாலத்தைக் கட்டி முடித்தேன்.
50 ஆண்டுகாலம் அதுவும் உழைத்தது. இப்பொழுது இடுப்பொடிந்த நிலையில் இருந்தது. ‘ஐயோ அந்தப் பாலம் போச்சலே இனிமேல் வரமுடியாதே’ என்று சொல்ல முடியாதபடி மக்கள் பாலத்தின் மீது போய் வழக்கப்பட்டுவிட்டார்கள். 48 நாட்களுக்குள்ளாக 48 கோடி ரூபாயைத் திரட்டி மீண்டும் பாலத்தை மிக உயர்ந்த பாலமாக கட்டி முடித்திருக்கிறேன். இது சாதனை இல்லையா?
காட்பாடி தொகுதியிலே நின்ற பொழுது இந்தப் பகுதிகளிலே ஆளே இருக்கமாட்டார்கள். காரணம் உப்புத் தண்ணீர் தான் எங்க பார்த்தாலும். ‘எனக்கு வாக்களியுங்கள், நான் பாலாற்றுத் தண்ணீரைத் தருகிறேன்’ என்றேன். அதையும் கலைஞரை கூட்டி வந்து பார்டர் போர்டு உருவாக்கி இங்கதான் இருக்கிறது. அந்த அவருக்குப் பெரிய பூவரையிலே கழிஞ்சூர், டவுன்ஷிப் அண்ட் பழைய காட்பாடி, தாராபடவேடு எல்லாருக்கும் கொடுத்தேன். அதை குடித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு இமய சாதனை இல்லையா?
அதற்குப் பிறகு இப்பொழுது அவர்களுக்கு ஒகேனக்கல்லில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். ஒகேனக்கல் எங்கே? காட்பாடி எங்கே? ஆனால் காட்பாடி மக்களுக்கு அதை வழங்குகிற சரித்திரத்தை நான் செய்திருக்கிறேன். அதே போன்று ஒரு சர்க்கரை ஆலை வேண்டுமென்று மக்கள் விரும்பினார்கள். அதையும் தலைவர் கலைஞரிடத்திலே வாதாடி ஒரு சர்க்கரை ஆலையை திருவல்லத்திலே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறேன்.
அதே போன்று இந்த ரயில்வே மேம்பாலம் ஒன்று ஊசலாடிக் கொண்டிருந்தது. எப்பொழுது விழுந்து விடலாம், அதற்காக ஒரு மறுபாலம் கட்டியிருக்கிறேன். அந்தப் பாலமும் இன்றைக்கு போதவில்லை என்பதால் புதுப்பாலம் ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த பிரிட்ஜ் கிட்ட போய் பார்த்தால் தெரியும், படம் போட்டு வைத்திருக்கிறோம், செய்திருக்கிறோம்.
அதே போல் இந்த ஊர் திருவல்லத்திலே இருக்கிறவன் பாஸ்போர்ட் சர்டிபிகேட் வாங்க வேண்டுமென்றால் குடியாத்தம் போய் வரவேண்டும் இரண்டு வழி. அதை மாற்றி நான் குடியாத்தத்தில் இருந்த தாலுகா ஆபீஸை குடியாத்தம் ரோடு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். ஆக இப்படி எத்தனையோ திட்டங்கள்.
நான் படிக்கிற காலத்திலே ஒரே ஒரு ஹைஸ்கூல். இன்றைக்கு ஏராளமான ஹைஸ்கூல்கள், கோர்ட் இருக்கிறது, லா காலேஜ் இருக்கிறது, எத்தனையோ கல்லூரிகள் இருக்கிறது. இவையெல்லாம் கல்வித்துறையிலே நான் செய்திருக்கிறேன். மேம்பாடுகள் இல்லையா?
எனவே வாக்காளர் பெருமக்களே, மீண்டும் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றி செய்து இந்தத் தொகுதியிலே தொண்டாற்றும்படி நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
கடைசிகட்ட பிரச்சாரம் : தட்டித்தூக்கிய திமுக – இருமுனை போட்டியாக மாறிய களம்
