தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் வெளியான ஆன்லைன் பிரச்சாரத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் அடுத்தடுத்து குவியும் புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்ந்தது இதனை எடுத்து வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது. எந்த வகையிலும் பிரச்சாரத்தை மேற்கொள்ளக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் பல்வேறு தேர்தல் நடைமுறைகள் தெரிவித்தது. குறிப்பாக வாக்கு பதிவு செய்வதற்கு முன்பான 48 மணி நேர அமைதி கால நடவடிக்கையை தேர்தல் ஆணையம் பின்பற்ற உத்தரவிட்டது
இந்த நிலையில் சமூக ஊடகங்களான பேஸ்புக் ட்விட்டர் whatsapp instagram போன்ற பக்கங்கள் மூலம் தமிழக வெற்றிக் கழகம் ஆன்லைன் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிக்கஸ்ட் ஆன்லைன் பொலிடிகல் கேம்பைன் ஏப்ரல் 22 என்ற பெயரில் ஆன்லைனில் உலா வரும் பிரச்சார அறிவிப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி வியாசர்பாடியைச் சேர்ந்த தேவ சகாயம் என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் இதே போன்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆன்லைன் பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் ஆணையர் தினமும் மேலும் மெட்டா நிறுவனத்திலும், எக்ஸ் நிறுவனத்திலும் புகார் அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும் மீறிய இந்த செயல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆன்லைன் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக தமிழக சைபர் கிரைம் பிரிவு கண்காணித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
