சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் யோகி பாபு தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் உள்ள அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 11 மணியளவில் இந்திய கிரிக்கெட் அணி தொப்பியை அணிந்துவந்த பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு தனது மனைவியுடன் வந்து வாக்களித்தாா். வாக்களிக்கும் முன் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினாா்.
மேலும், வாக்களித்த பின் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல் முடிந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்வார்கள் எனவும் வாக்களிப்பது மிகவும் முக்கியம். அனைவரும் வாக்களிக்க வேண்டும். பொதுமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடுவது முக்கியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்றார்” என்று கூறினாா்.
”NO NEED” மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா? – சுரேஷ் சந்திரா விளக்கம்

