Homeசெய்திகள்தமிழ்நாடுவருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

-

- Advertisement -

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகைஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள் .மே 4ம் தேதி திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள் என்று கூறினார்.

பின்னா் வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை வெளியிட்டார். சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறை துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அட்டூழியம் செய்கிறார்கள். காய்கறி வாங்கும் பையைக் கூட விடாமல் அதில் என்ன உள்ளது என சோதனை நடத்தினர். அது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன. சோதனை எதுவும் நடத்தவில்லை என வருமான வரித்துறை கூறுவது அப்பட்டமான பொய்.

we-r-hiring

சோதனை நடத்தினோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே? வருமான வரித்துறை சோதனை நடத்தியது தவறில்லை; அதை மறைப்பது ஏன்? சோதனை நடைபெறவில்லை என மறைக்கிறார்கள்; சிசிடிவி, புகைப்படங்களில் உள்ள அதிகாரிகள் யார்? வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 5 மாநில தேர்தல்களுக்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வரும். ஆட்சி மாற்றத்தை கொண்டு வர சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் தயாராக உள்ளனர்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறினார்.

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

 

MUST READ