கொடைக்கானலில் தனியார் நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி ஓய்வெடுக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்தார்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள் குடும்பத்தினருடன் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க வந்தடைந்தார்.
முன்னதாக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த நிலையில் அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் வந்தடைந்தார். மேலும் சாலையெங்கும் காவலர்கள் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…
முதல்வரின் வருகையால் கொடைக்கானல் மலை பகுதி முழுவதும் இன்று முதல் ட்ரோன்கள் மற்றும் தனி விமானங்கள் பறக்க மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் முதல்வரின் வருகையொட்டி கொடைக்கானல் நகர் பகுதி முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
