பல்லாவரம் அருகே குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்,ஞானமணி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் இதே வீட்டில் வசித்து வருகிறார். சுபாஷ், அனகாபுத்தூரில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குன்றத்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.
இந்நிலையில், சிறப்பான தரிசனம் முடித்து விட்டு, மீண்டும் சுபாஷ் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த சுமார் 9 சவரன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர் உடனடியாக பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற இடத்தை சென்ற போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து குற்றவாளியின் கைரேகை சேகரித்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அப்பகுதயில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 15 வருடங்களாக சிறுக சிறுக சேர்த்து வைத்த நகைகள் திருடு போனதால் மன வேதனையில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
