உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உச்ச நீதிமன்ற வரலாற்றில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் மோகனா பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மோகனாவின் இந்த நியமனம் பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள மோகனாவுக்கு தனது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
“அனைவரும் சமம் என்றால் விஐபி தரிசனம் ஏன்?” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

