Homeசெய்திகள்க்ரைம்ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் - மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது

ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது

-

- Advertisement -

சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் - மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைதுஐஐடியில் படித்து வரும் 20 வயது மாணவி, தரமணி பகுதியில் தங்கி வருகிறார். நேற்று முன்தினம் தரமணி பகுதியில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், அங்கிருந்து தப்பிச் சென்ற மற்றொரு இளைஞரையும் தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த விஜய் (30) மற்றும் விக்னேஷ்வர் (27) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் வேளச்சேரியில் தங்கி தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டது. சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

we-r-hiring

MUST READ