Homeசெய்திகள்மாவட்டம்பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…

பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…

-

- Advertisement -

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஜாதி அடிப்படையில் குழுக்களாக செயல்படும் மாணவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.பள்ளிகளில் நல்லிணக்கத்தை காக்க நெல்லை ஆட்சியரின் புதிய நடவடிக்கை…

நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த மோதல்களின் பின்னணியில் ஜாதி சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், ஜாதி மோதல்களில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் விவரங்களை கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜாதி ரீதியாக குழுக்களாக இயங்கி வரும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

we-r-hiring

பள்ளி வளாகங்களில் அமைதியான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வால் ஏற்படும் மோதல்களை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகங்கள் இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

MUST READ