Homeசெய்திகள்அரசியல் “ஆட்சி அமைக்க அந்த 2 சீட்டு எவ்வளவு முக்கியம்னு உணர்த்திட்டோம்": திருமாவளவன் ஆவேச முழக்கம்..!!

 “ஆட்சி அமைக்க அந்த 2 சீட்டு எவ்வளவு முக்கியம்னு உணர்த்திட்டோம்”: திருமாவளவன் ஆவேச முழக்கம்..!!

-

- Advertisement -

 

 “ஆட்சி அமைக்க அந்த 2 சீட்டு எவ்வளவு முக்கியம்னு உணர்த்திட்டோம்": திருமாவளவன் ஆவேச முழக்கம்..!!
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

“இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு விசிக என்ன செய்யப் போகிறது என ஏளனம் பேசியவர்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பதற்கு அந்த இரண்டு சீட்டுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது உணர்த்தியுள்ளது” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

we-r-hiring

​மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில், கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 தியாகிகளின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களது நினைவிடத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பகிர்ந்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

“தியாகி முருகேசனின் கனவு நனவாகியுள்ளது”

“பட்டியல் சமூகத்தினருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரையே நீத்த தியாகி முருகேசனின் கனவு இன்று நனவாகியுள்ளது. மேலூர் சட்டமன்றப் பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெ. விசுவநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது முருகேசன் கண்ட அரசியல் கனவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ​”கடந்த 29 ஆண்டுகளில் விசிக பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் கடந்து இன்று தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. என்னோடு அரசியல் கட்சி ஆரம்பித்த பலரும் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்ட சூழலில், விசிகவைப் பக்குவப்படுத்தி இந்த உயரத்திற்கு மாற்றிக் காட்டியுள்ளோம். 2 சீட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் என்று எங்களைக் கேலி செய்தவர்களுக்கு, தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க அந்த 2 இடங்கள் எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை விசிக நிரூபித்துக் காட்டியுள்ளது”  என்றார்.

மேலும், ​ “தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே, இங்கு தொங்கு சட்டசபைதான் அமையும் என்று நான் உறுதியாகக் கூறினேன். அப்படி ஒரு சூழல் வரும்போது நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளே இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகத்தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடத் தேர்வு செய்தேன். ஆனால், நான் அங்குப் போட்டியிடாமல் போனதற்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பத்திரிகையாளர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்தான் கேட்க வேண்டும்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.

​தவெக-வின் கோரிக்கைக்கு ஆதரவு

​தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழக அரசு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். மேலும், திருச்சியில் நடைபெற உள்ள ‘தமிழ் தேசிய மாநாட்டில்’ விசிக தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பேராதரவு தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

​தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் விசிகவின் பங்களிப்பு மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த திருமாவளவனின் இந்த ஆவேசப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

MUST READ