Homeசெய்திகள்சென்னைகைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில்...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

-

- Advertisement -

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர் போலீசார் முறையாகப் பின்பற்றாததால், திமுக ‘ஜென் z’ (Gen Z) செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனை (சரண்ராஜ் ஜெயராமன்) எழும்பூர் நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் அவசர அவசரமாகக் கைது நடவடிக்கை மேற்கொண்டதற்காகக் காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

​திமுகவின் சமூக ஊடகச் செயற்பாட்டாளரான சரண் ஜெயராமன் மீது சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து, எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

we-r-hiring

​நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காரசார வாதம்
​சரண் ஜெயராமன் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரசன்னா மற்றும் சரவணன் ஆகியோர் ஆஜராகிப் பலத்த வாதங்களை முன்வைத்தனர். அவர்களது வாதத்தின் முக்கிய அம்சங்கள், ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகளுக்குக் கைது செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நபருக்குச் சட்டப்பிரிவு 41A-ன்கீழ் கட்டாயம் விசாரணை நோட்டீஸ் வழங்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பாகும். ஆனால், இந்த வழக்கில் சரண் ஜெயராமனுக்கு அத்தகைய நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை. கைது செய்வதற்கான குறிப்பாணை (Arrest Memo) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு வெறும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத்தான் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படும் போது அவரது பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ காவல்துறை தரப்பில் எந்தவிதத் தகவலும் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. இதன் மூலம், கைதுக்கான எந்தவொரு சட்ட விதிகளும் இங்குப் பின்பற்றப்படவில்லை.கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

​காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் – சொந்த ஜாமீனில் விடுதலை
​மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட 13-வது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மும்தாஜ், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பி காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். ​கைது நடவடிக்கையின் போது முறையான சட்ட நடைமுறைகள் எதையும் கொளத்தூர் போலீசார் பின்பற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி மும்தாஜ், சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் (Own Bail) விடுவித்து அதிரடி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் சென்னை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளும் எதிர் எதிரானது” – சென்னையில் ஆளுநர் அர்லேகர் பரபரப்பு பேச்சு!

MUST READ