மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பலத்த தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர். குறிப்பாக, 58 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தனிக் குழுவாகச் செயல்படத் தொடங்கினர். இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த மாநிலங்களவை உறுப்பினர்களான சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பரைக் ஆகியோர் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தனர்.

இந்த 3 எம்பிக்களின் ராஜினாமாவால் காலியான இடங்களுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி முக்கிய தேதிகள் பின்வருமாறு, நாளை முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜூலை 24-ஆம் தேதி அன்று நடைபெறும். ஜூலை 24 அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மற்றும் எம்.பிக்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தல், மேற்குவங்க அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!
