HomeBreaking Newsஇலங்கை சிறையில் பயங்கர கலவரம்: 4 போலீசார் உட்பட 25 பேர் உயிரிழப்பு

இலங்கை சிறையில் பயங்கர கலவரம்: 4 போலீசார் உட்பட 25 பேர் உயிரிழப்பு

-

- Advertisement -

இலங்கையில் சிறைக்கைதிகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில், போலிஸ் அதிகாரிகள் 4 பேர் உட்பட மொத்தம் 25 பேர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை

we-r-hiring

இரண்டாவது நாளாக நீடிக்கும் பதற்றம்:
இலங்கையின் கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சிறைக்குள் இருக்கும் இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து, பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி ஆக்ரோஷமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தொடங்கிய இந்த மோதல் போக்கு, இன்றும் (ஜூலை 06) இரண்டாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருவதால் சிறை வளாகமே போர்க்களமாக காட்சியளிக்கிறது.

கலவரத்திற்கான பின்னணி என்ன?
முதற்கட்ட விசாரணையின்படி, சிறைக்குள் நடக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மோதலுக்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

சிறைக்குள் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவளிக்கும் ஒரு குழுவிற்கும், அதனை கடுமையாக எதிர்க்கும் மற்றொரு குழுவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், பின்னர் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை:
சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக நீடித்து வரும் இந்த மோதல்களைக் கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, கலவரத்திற்குக் காரணமான முக்கிய மூன்று கைதிகள் உடனடியாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு உள்ளேயும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

MUST READ