HomeBreaking News"ஆன்லைன் வன்மத்திற்கு எதிராக இனிமேலும் நிற்பேன்!" - சிறப்பு குழந்தைகளுடன் படம் பார்த்த பின் நடிகர்...

“ஆன்லைன் வன்மத்திற்கு எதிராக இனிமேலும் நிற்பேன்!” – சிறப்பு குழந்தைகளுடன் படம் பார்த்த பின் நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!

-

- Advertisement -

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆன்லைன் வன்மம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்; நான் எப்போதும் அதற்கு எதிராக நிற்பேன்” என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
​செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

விஷ்ணு விஷால்,

we-r-hiring

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இத்திரைப்படம், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஆட்டிசம் (Autism) குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்காகச் சிறப்புத் திரையிடலாகக் காண்பிக்கப்பட்டது. இதில் நடிகர் விஷ்ணு விஷால் நேரில் கலந்துகொண்டு, குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது:

வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சி
​”‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிறது. இதற்காகக் கோவை, திருச்சி, தஞ்சாவூர் எனப் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களைச் சந்தித்தேன். அது மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.
​இன்று ‘ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ரேடியன்ஸ்’ சார்பில் ரோகினி திரையரங்கில் சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்த்தது எனக்குள் மிகுந்த நெகிழ்ச்சியையும், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவற்ற மகிழ்ச்சியையும் தந்துள்ளது.”

​ஆட்டிசம் விழிப்புணர்வு தேவை
​தொடர்ந்து பேசிய அவர், “ஆட்டிசம் குறைபாடு பற்றிப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் அதிகரிக்க வேண்டும். தயவுசெய்து இதைப் பற்றி அனைவரும் ஆராய்ந்து படியுங்கள், நம்மைச் சுற்றிப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன” என்று கேட்டுக்கொண்டார்.

ஆன்லைன் வன்மத்திற்கு எதிர்ப்பு
​சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாகப் பெருகி வரும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய விஷ்ணு விஷால்:
“கடந்த மூன்று நாட்களாகத் தியேட்டர் விசிட் மூலம் எனக்குப் பயங்கர சந்தோஷம் கிடைத்தது உண்மைதான். ஆனால், இன்று காலையில் இந்தச் சிறப்பு குழந்தைகளுடன் கிடைத்த சந்தோஷம் தனித்துவமானது.
​அதே நேரத்தில், தற்போது ஆன்லைனில் இருக்கும் வன்மம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்கு எதிராக நாம் எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும். நான் அதற்கு எதிராக எப்போதும் நின்றேன், இனிமேலும் தொடர்ந்து நிற்பேன். ஒருவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்து (Target) வசைபாடுவது நல்லதல்ல; அது இந்தச் சமூகத்திற்கும் ஆரோக்கியமானது கிடையாது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

MUST READ