HomeBreaking Newsலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்!" - நடிகர் அஜித்திற்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்!

லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்!” – நடிகர் அஜித்திற்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்!

-

- Advertisement -

நடிகர் அஜித் குமார் முழு நேரமாக கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடிக்க வர வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றின் மூலம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்!" - நடிகர் அஜித்திற்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்!

இது குறித்து ​அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,

we-r-hiring

​திரைத்துறை தான் அடையாளம்!
​”லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலனுக்காக, அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்களே மீண்டும் நடிக்க வாருங்கள். தங்களை இந்த உலகிற்கு அடையாளம் காட்டியது சினிமா தான். அதேபோல், கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்கள் மீது அன்பு செலுத்துவதற்கும் இந்த திரைத்துறை தான் காரணம்.

​விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார்…
​தற்போது நடிகர் விஜய் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிவிட்டார். இந்தச் சூழலில், நீங்கள் ‘ரேஸ், ரேஸ்’ என்று மிகவும் ஆபத்தான, உயிரைப் பணயம் வைக்கக்கூடிய கார் ரேஸே தனது ‘பேஷன்’ (Passion) என்று அதிலேயே தீவிரமாக இருக்கிறீர்கள்.

​இரு கரம் கூப்பி வேண்டுகோள்!
​தயவுசெய்து, சினிமா நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையையும், தங்களை உருகி உருகி காதலிக்கும் ரசிகர்களின் மகிழ்ச்சியையும் கருத்தில் கொள்ளுங்கள். ஒரு உன்னத லட்சியத்திற்காக, 10 தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து ஒரு படத்தை தயாரிக்க வைத்து, அதில் நீங்கள் நடிக்க வர வேண்டும் என்று இரு கரம் கூப்பி, இரு கரம் நீட்டி தங்களை அன்போடு வரவேற்கிறேன்.” ​இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஆன்லைன் வன்மத்திற்கு எதிராக இனிமேலும் நிற்பேன்!” – சிறப்பு குழந்தைகளுடன் படம் பார்த்த பின் நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!

MUST READ