HomeBreaking Newsதலைவர்களின் பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்: சென்னை மணலியில் தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் கடும்...

தலைவர்களின் பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்: சென்னை மணலியில் தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் கடும் வாக்குவாதம்!

-

- Advertisement -

கடந்த திமுக ஆட்சியின் போது பேருந்து நிலையங்கள் மற்றும் நிழற்குடைகளில் வைக்கப்பட்டிருந்த முந்தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் மற்றும் திமுக அரசின் திட்டங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு தவெக அரசு மீது திமுக தரப்பு கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளதுடன், அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளது. சென்னை மணலி புதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த அதிரடி நடவடிக்கை அரங்கேறி வருகிறது.
மணலி

திட்டமிட்டு அகற்றப்படும் ‘திராவிட மாடல்’ பெயர்கள்!
​கடந்த திமுக ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் பெயர்ப்பலகைகள் பேருந்து நிழற்குடைகளில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அவை ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்றன.

we-r-hiring

குறிப்பாக, பேருந்து நிழற்குடைகள் மற்றும் குடிநீர் திட்டப் பலகைகளில் இடம் பெற்றிருந்த முந்தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர், புகைப்படம் மற்றும் ‘திராவிட மாடல்’ போன்ற வார்த்தைகள் திட்டமிட்டு அகற்றப்படுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழக) அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுப்பதாக திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மாமன்ற உறுப்பினர் நிதி… சேதமடையும் நிழற்குடைகள்!
​மாமன்ற உறுப்பினரின் (கவுன்சிலர்) தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிழற்குடைகளில் இருந்து பெயர்ப்பலகைகளை பலவந்தமாக அகற்றுவதால், நிழற்குடைகள் சேதமடைவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மாநகராட்சி பொறியாளருடன் திமுகவினர் வாக்குவாதம்!
​இதற்கிடையே, மணலி பகுதியில் பெயர்ப்பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை மாநகராட்சி பொறியாளரை திமுகவினர் முற்றுகையிட்டு காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்களுக்கான முக்கிய திட்டங்களின் அறிவிப்புப் பலகைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் அகற்றக் கூடாது” ​என்று அதிகாரிகளிடம் திமுகவினர் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

MUST READ