Homeசெய்திகள்மாவட்டம்21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!

21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!

-

- Advertisement -

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான தாமிரபரணி ஆறு, நாளுக்கு நாள் அசுத்தமாகி வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமிரபரணி ஆற்றின் தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி தங்களின் ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துக் கொண்டனர்.

21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!

we-r-hiring

21 நாட்களில் 90 டன் குப்பைகள்
ஆற்றைப் தூய்மைப்படுத்தும் பணியின் போது எடுக்கப்பட்ட தரவுகள் (Data) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதை ஆய்வு செய்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். வெறும் 21 நாட்களில் மட்டும் தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 90 டன் எடையுள்ள பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!

நீதிபதிகள் வெளியிட்ட உருக்கமான கருத்து
 “தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் கொட்டப்பட்டுக் கிடக்கும் கழிவுகளைப் பார்க்கும்போது மிகுந்த கவலை அளிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் ஒரு நதியை இப்படி குப்பைத் தொட்டியாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர். ஆற்றில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீதும், துணிகளைப் போட்டுவிட்டுச் செல்பவர்கள் மீதும் உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் கடுமையான கண்காணிப்பு மற்றும் அபராத நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஆற்றைப் பாதுகாக்கப் பொதுமக்கள் தங்களின் சமூகப் பொறுப்பை உணர வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த அதிர்ச்சித் தகவல் தென் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பையும், விழிப்புணர்வுக்கான தேவையையும் ஏற்படுத்தியுள்ளது.

வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!

MUST READ