Homeசெய்திகள்மாவட்டம்"ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?" – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும்...

“ஊழியர்களைத் திருடர்கள் எனச் சித்தரிப்பதா?” – அமைச்சர் விக்னேஷைக் கண்டித்து கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்!

-

- Advertisement -

டாஸ்மாக் ஊழியர்களை ஒருமையில் பேசுவதும், அவர்களைத் திருடர்கள் போலச் சித்தரிப்பதும் மதுவிலக்குத் துறை அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல; வரவிருக்கும் பட்ஜெட்டில் பணி நிரந்தரம் உள்ளிட்ட அறிவிப்புகள் வராவிட்டால் போராட்டம் தீவிரமடையும்” என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) எச்சரித்துள்ளது. 23 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் கோவை டாடாபாத் பகுதியில் சிஐடியு சார்பில் மண்டல அளவிலான மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் திருச்செல்வன் வெளியிட்ட அதிரடி அறிக்கை வருமாறு:

டாஸ்மாக்

we-r-hiring

​காலி பாட்டில் திட்டம்; ஏமாற்றிய அமைச்சர் விக்னேஷ்!

​”புதிய அரசு பொறுப்பேற்றவுடன் டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். குறிப்பாக, கொண்டு வரப்பட்டுள்ள காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தால் கடை ஊழியர்களுக்கு வேலைப் பளுவும், பணிச்சுமையும் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. அசுத்தமான, சுகாதாரமற்ற காலி பாட்டில்களை ஊழியர்களே கைகளால் கையாளும் இழிநிலை தொடர்கிறது. இப்பிரச்சினைகளுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்தார். பின்னர், ஒரு மாத கால அவகாசம் கேட்டார். ஆனால், ஒரு மாதத்தைக் கடந்தும் காலி பாட்டில் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் அரசு கொண்டு வரவில்லை. அமைச்சர் தனது வாக்குறுதியை முழுமையாகத் தவறிவிட்டார்.

​ஊழியர்களைத் ‘திருடர்கள்’ என்பதா? அமைச்சர் மாண்புக்கு அழகல்ல!

​அமைச்சர் விக்னேஷின் சமீபத்திய பேட்டிகள் எங்களுக்குப் பெரும் மனவேதனையை அளித்துள்ளன. அரசுக்காக உழைக்கும் கடை ஊழியர்களைப் பொதுவெளியில் ஒருமையில் பேசுவதும், அவர்கள் ஏதோ திருடர்கள் என்பது போலச் சித்தரிப்பதும் ஓர் அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல. கடை ஊழியர்களின் உண்மையான களப் பிரச்சினைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள தொழிற்சங்கங்களுடன் அரசு உடனடியாகக் கலந்தாலோசிக்க வேண்டும்.

​முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வைக்கப்பட்ட கோரிக்கை

​நாளை நடைபெறவுள்ள அமைச்சರவைக் கூட்டத்திலும், தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டிலும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் துறை அமைச்சர் விக்னேஷ் ஆகியோர் டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இந்த பட்ஜெட்டிலும் எங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால், அடுத்தகட்டமாகத் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் மிகத் தீவிரமாக வெடிக்கும்” என்று திருச்செல்வன் எச்சரித்துள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் சிஐடியு சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

MUST READ