Homeசெய்திகள்க்ரைம்சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை வார்டன் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து தாக்கிய அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!அதிகாரிகளுக்குத் தெரியாமல் திருடப்பட்ட சாவி
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த சபரிவர்மன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலில் 19 காயங்கள் இருப்பதாகப் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்ததை அடுத்து, இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்நிலையில் இக்கொலை எவ்வாறு அரங்கேறியது என்ற பகீர் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவில், சிறையின் உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் அங்கிருந்த அறையின் சாவியைச் சிறை வார்டன் திருடிச் சென்றுள்ளார். பின்னர், சபரிவர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையை இரகசியமாகத் திறந்து, உள்ளே புகுந்து சக கைதிகளுடன் சேர்ந்து அவரைத் கொடூரமாகத் தாக்கியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நேசமணிநகர் தனிப்படை போலீசார், குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் மாவட்டச் சிறை வளாகம் மற்றும் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளின் வெளிப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைப் போலீசார் கைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் சாவியை எடுத்துச் சென்றது யார், தாக்குதலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது இந்த காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

சிறைக் காவலர்களிடம் தீவிர விசாரணை
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 சிறை ஊழியர்கள் மற்றும் 8 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறையில் பணியாற்றும் மற்ற காவலர்களுக்கும் இதில் ஏதேனும் தொடர்போ அல்லது உடந்தையோ இருக்கிறதா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாவி, வார்டன் கைக்கு எப்படிச் சென்றது? நள்ளிரவில் தாக்குதல் நடந்தபோது மற்ற காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பது குறித்து சிறைப் பணியாளர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் சிக்கலாம் என்பதால் சிறைத்துறையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

விசாரணை கைதி அடித்துக் கொலை! முதன்மை வார்டன் உட்பட 3 சிறைத்துறையினர் மற்றும் 8 கைதிகள் கைது – 3-ஆவது நாளாக உறவினர்கள் தொடர் போராட்டம்!

MUST READ