
மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை (மே 10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 07.00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது.

என் கடவுளப் பாத்துட்டேன்… தோனியைச் சந்தித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த தமன்!
கர்நாடகாவில் ஆண்கள் 2,430 பேர், பெண்கள் 185 பேர் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல், 5.2 கோடி வாக்காளர்களுக்காக 58,545 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது தேர்தல் ஆணையம். காங்கிரஸ், பா.ஜ.க. மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க. 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
நாளை (மே 10) பதிவாகும் வாக்குகள் மே 13- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.