Homeசெய்திகள்தமிழ்நாடு"வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்": தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!

“வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்”: தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது என்றும், அரசால் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

"வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்": தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!

we-r-hiring

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தவெக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “முக்கியமான திட்டம் எதுவும் இல்லை… வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை!”

செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்:
“விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இந்த வேளாண் பட்ஜெட் அவர்களுக்குப் பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் மட்டுமே தந்துள்ளது. இதில் எந்தவொரு முக்கியமான புதிய திட்டமும் இடம்பெறவில்லை. ஏற்கனவே முந்தைய ஆட்சிகளில் நடைமுறையில் இருந்த திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி, ஸ்டிக்கர் ஒட்டி அறிவிக்கும் வேலையை மட்டுமே இந்த அரசு செய்துள்ளது. சுமார் 2 மணி நேரமாக வாசிக்கப்பட்டது மட்டும்தான் இந்த பட்ஜெட்டின் ஒரே சாதனையாக உள்ளது.”

நெல் கொள்முதல் நிலையங்களின் நிலை:
தொடர்ந்து பேசிய அவர், நெல் கொள்முதல் நிலையங்களின் அவல நிலை குறித்துச் சுட்டிக்காட்டினார், “கடந்த கால ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் என்னென்ன சிரமங்கள் இருந்தனவோ, அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் வழங்வுள்ளதாக தவெக அரசு தெரிவித்துள்ளது. சொல்வதை பேச்சோடு நிறுத்தாமல், தார்ப்பாயாவது கொடுத்தால் நிஜம்! விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் அதையாவது அரசு செய்யட்டும்” என்று தெரிவித்தார்.

வேளாண் துறையை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் எந்தவிதத் தொலைநோக்கு திட்டங்களும் இதில் இல்லாததால், இந்த பட்ஜெட் வெறும் ‘வார்த்தை ஜாலம்’ என அவர் விமர்சித்தார்.

பெண் விவசாயிகளை ‘ட்ரோன்’ இயக்க வைக்கும் “வெற்றி வான் மகள் படை”!

MUST READ