
மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) நடக்கிறது. மே 10- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 08.00 மணி முதல் எண்ணப்படுகின்றன.

விஜய் தேவரகொண்டாவின் அன்பு “கஸ்டடி”- யில் சமந்தா… வைரலாகும் க்யூட் வீடியோ
தபால் வாக்குகள் 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.க. 224, காங்கிரஸ் 223, ம.ஜ.க. 207, ஆம் ஆத்மீ 217 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டன. காங்கிரஸ், ம.ஜ.க., பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உண்மையானு கூட பாக்காம இப்படி பண்றிங்களே… ஊடகங்கள் மீது கடுப்பான நிகிலா விமல்!
சட்டப்பேரவைத் தேர்தலில் 184 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை போட்டியிட்டனர். தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக் கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவைக்கு வாய்ப்பு என தகவல் வெளியானது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் ம.ஜ.க.வுடன் சேர்த்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.