Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்டோ ஓட்டுநர் TO எம்.எல்.ஏ - சட்டப்பேரவையில் ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு நெகிழ்ச்சி உரை!

ஆட்டோ ஓட்டுநர் TO எம்.எல்.ஏ – சட்டப்பேரவையில் ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு நெகிழ்ச்சி உரை!

-

- Advertisement -

இதே தலைமைச் செயலகத்திற்கு எத்தனையோ முறை ஆட்டோ ஓட்டுநராகச் சவாரி வந்து இறங்கியிருக்கிறேன்… ஆனால் இன்று அதே தலைமைச் செயலகத்திற்கு எம்.எல்.ஏ-வாக உள்ளே வந்துள்ளேன்! என்று ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.ஆட்டோ ஓட்டுநர் TO எம்.எல்.ஏ - சட்டப்பேரவையில் ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு நெகிழ்ச்சி உரை!

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், எளிய பின்னணியில் இருந்து வந்த தமக்கு மக்கள் சேவை செய்ய வாய்ப்பளித்த தவெக தலைவர் விஜய்க்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

we-r-hiring

பேரவையில் விஜய் தாமு பேசியதன் விவரம்:  ஒரு சாமானிய ஆட்டோ ஓட்டுநராக எனது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

பலமுறை பயணிகளை ஏற்றிவந்து இந்தத் தலைமைச் செயலகத்தின் வாசலில் இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறேன்.

அன்றைக்கெல்லாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்திற்குள் ஒரு மக்கள் பிரதிநிதியாக உள்ளே செல்வோம் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.

இன்றைக்கு ஒரு சாதாரண எளிய சாமானியனும் சட்டமன்றத்திற்குள் எம்.எல்.ஏ-வாக நுழைய முடியும் என்பதைச் சாதித்துக் காட்டியவர் நமது முதலமைச்சர் விஜய் ஒருவர்தான்! சாமானிய மனிதர்களின் குரல் பேரவையில் ஒலிப்பதை அவர் சாத்தியமாக்கியுள்ளார்.

எளிய ஆட்டோ ஓட்டுநராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்த ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமுவின் இந்த உருக்கமான பேச்சு, பேரவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களின் கவனத்தையும் ஈர்த்ததுடன் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

“அம்பேத்கர் தந்த உரிமையில் வாழ்கிறோம்.. பிச்சை போடாதீங்க!” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி பேச்சு!

MUST READ