Homeசெய்திகள்தமிழ்நாடுவார்த்தையை ஒழிச்சீங்க.. காலனியில் இருக்கும் குடிசைகளை ஒழிச்சீங்களா? திமுகவை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜூனா!

வார்த்தையை ஒழிச்சீங்க.. காலனியில் இருக்கும் குடிசைகளை ஒழிச்சீங்களா? திமுகவை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜூனா!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்ற அவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாகப் பேசினார். எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டத் தொடங்கினால், திமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றை அம்பலப்படுத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

வார்த்தையை ஒழிச்சீங்க.. காலனியில் இருக்கும் குடிசைகளை ஒழிச்சீங்களா? திமுகவை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜூனா!

we-r-hiring

“பாஜக கூட்டணி பாவத்தை மறைக்க முடியாது”
அவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “தலித் மற்றும் இஸ்லாமிய சகோதரர்களுக்குத் தாங்கள்தான் அனைத்து நன்மைகளையும் செய்ததாக திமுகவினர் பேசுகிறார்கள். ஆனால், 1999 முதல் 2004 வரை பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்து 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியைச் செலுத்தியது இதே தி.மு.க-தான்.

அப்போது நடைபெற்ற கோத்ரா கலவரத்தின் போது இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போது, திமுக அமைச்சரவையில் இருந்தது. ‘பதவி முக்கியமல்ல, இஸ்லாமியர்களின் உயிர்தான் முக்கியம்’ என்று கூறி அப்போதே அமைச்சரவையைத் துறந்து ராஜினாமா செய்திருக்கலாமே? ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சமூக இயக்கம் என்று இதே அவையில் கலைஞர் கூறியதையும், 1999-2004 காலகட்டத்தில் அவர் என்ன பேசினார் என்பதையும் எங்களால் எடுத்துக் கூற முடியும். இந்த வரலாற்றுப் பாவத்தை திமுகவால் எப்போதும் மறைக்க முடியாது” என்று சாடினார்.

தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
தலித் நலன் குறித்து திமுக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர், “தேசிய தலித் மனித உரிமைகள் ஆணையத்தின் (NCDHR) அறிக்கைப்படி, 2019 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 67 சதவீதம் அதிகரித்த மாநிலமாகத் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. தலித் மக்களுக்கு எதிரான அதிகமான குற்றங்கள் நடந்தது திமுகவின் ஆட்சியில்தான் என்பதைத் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன” என்றார்.

வார்த்தையை ஒழிச்சீங்க.. காலனியில் இருக்கும் குடிசைகளை ஒழிச்சீங்களா? திமுகவை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜூனா!

சி.ஏ.ஜி (CAG) அறிக்கையைச் சுட்டிக்காட்டி நிதியிழப்பு அம்பலம்
திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நல நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் முடக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஆதிதிராவிடர் நலத் திட்டங்களுக்கான நிதி முழுமையாகப் பயனாளிகளுக்குச் சென்று சேரவில்லை என்பதை சி.ஏ.ஜி ஆடிட் அறிக்கை உறுதி செய்துள்ளது.

  • 2021-2-ல் எஸ்.சி., எஸ்.டி பெண் குழந்தைகள் கல்வி ஊக்குவிப்புத் தொகை: ₹6.67 கோடி சேவிங்ஸ் (பயன்படுத்தப்படாத நிதி)

  • வெளிநாட்டு கல்வி உதவித்தொகை (Abroad Scholarship): ₹5.58 கோடி சேவிங்ஸ்

  • உயர் கல்வி சிறப்பு உதவித்தொகை: ₹5.58 கோடி சேவிங்ஸ்

  • எஸ்.சி., எஸ்.டி மாணவர் கல்வி உதவித் திட்டம்: ₹7.24 கோடி சேவிங்ஸ் நிதி ஒதுக்கப்பட்டதாகக் கணக்கு காட்டிவிட்டு, உண்மையான தலித் மாணவர்களுக்கு அந்த ஃபண்ட் போய்ச் சேரவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

வார்த்தையை ஒழிச்சீங்க.. காலனியில் இருக்கும் குடிசைகளை ஒழிச்சீங்களா? திமுகவை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜூனா!

“75 ஆண்டுகளில் மாறாத காலனி நிலைமை”
 பெயர் மாற்ற விவகாரம் குறித்துப் பேசிய அவர், “சாதி என்கிற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே துறை பெயரில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம். ‘காலனி’ என்ற வார்த்தையை ஒழித்ததாகக் கூறுகிறீர்கள், ஆனால் காலனி வாழ்க்கை முறை ஒழிந்துவிட்டதா? விழுப்புரம், கள்ளக்குறிச்சி எனத் தமிழகம் முழுவதும் 25 முதல் 28 சதவீத தலித் மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளான தண்ணீர், சாலை, மருத்துவ வசதிகள் அற்ற குடிசைகளில்தான் வாழ்கிறார்கள். தலித் பெண்களுக்கான உயர்கல்வி முக்கியத்துவம் கடந்த 75 ஆண்டுகளில் கொடுக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள்தான் ஆகிறது. எனவே, தேவையற்ற சத்தங்களை விடுத்து, ஜனநாயகப் பூர்வமான அர்த்தமுள்ள விவாதங்களை மேற்கொள்வோம்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

தனித்தொகுதி என சொல்லாதீங்க: சட்டப்பேரவையில் குடியாத்தம் எம்.எல்.ஏ சிந்து கோரிக்கை!

MUST READ