Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம் தவறானது: அரசே கைவிடு! – இந்திய கம்யூனிஸ்ட்...

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம் தவறானது: அரசே கைவிடு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தல்

-

- Advertisement -

மீனவர்களின் வாழ்வாதாரமும், கடலோரச் சூழலியலும் கடுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கை.சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம் தவறானது: அரசே கைவிடு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தல்

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு முற்றிலும் தவறானது என்றும், இத்திட்டத்தை உடனடியாகக் அரசு கைவிட வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தியுள்ளது.

we-r-hiring

வாழ்வாதாரமும் சூழலியலும் பாதிக்கும்:
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகத்தைக் கட்டுவது சுற்றுச்சூழல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக:

9 மீனவக் குடியிருப்புகள் பாதிப்பு: இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ள இடத்தை சுற்றி முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், பவானி குப்பம், இருதயபுரம் உள்ளிட்ட 9 பிரதான மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன.

வாழ்வாதார உரிமை: கடற்கரையை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தால் மீனவ மக்களின் பாரம்பரிய வாழ்வாதார உரிமைகளும், பொதுமக்களின் கடற்கரைப் பயன்பாடும் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

கூடுதல் நெரிசல்: குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதற்கான பிரதான சாலைகள், பிரம்மாண்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பல அடுக்கு பாதுகாப்புச் சுவர்களை அமைப்பது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் சீரழிக்கும்.

மாற்று இடங்களைப் பரிசீலிக்கக் கோரிக்கை:
கடலோரப் பகுதிகளை ஆக்கிரமிப்பதையும், உழைக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள சிபிஐ, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு கண்டறிந்து பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு?

MUST READ