Homeசெய்திகள்அரசியல்மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

-

- Advertisement -

தேர்தல் களங்கள்: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் அதிமுகமதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு முக்கிய இடம்பெற்றவர்கள்: எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஓ.எஸ். மணியன், காமராஜ் உள்ளிட்டோர்

we-r-hiring

விடுபடல்:  சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி பெயர்கள் இடம்பெறவில்லை

வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புச்சிக்காக, அஇஅதிமுகவின் சார்பில் போட்டியிடும் 40 நட்சத்திரப் பேச்சாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளும் அதிமுக பட்டியலும்இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் 40 நட்சத்திரப் பேச்சாளர்களின் பெயர்களையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியலில் இடம்பெற்ற முக்கிய தலைவர்கள்:எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) கே.பி. முனுசாமி திண்டுக்கல் சி. சீனிவாசன் டாக்டர் எம். தம்பிதுரை பொள்ளாச்சி வி. ஜெயராமன் வளர்மதி ஓ.எஸ். மணியன் ஆர். காமராஜ்உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் உட்பட மொத்தம் 40 பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தவிர்க்கப்பட்ட பெயர்கள்: அதிமுகவின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரது பெயர்கள் இந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுகவின் பிரச்சாரப் பணிகள் விரைவில் சூடுபிடிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

MUST READ