“ஜல்லிக்கட்டு தடை நீங்க பிரதமரே காரணம்”- அண்ணாமலை
ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பானது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று அளிக்கப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை இல்லை, தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஜல்லிக்கட்டு போட்டி இணைந்தது அல்ல என்ற கருத்தை ஏற்க முடியாது எனக்கூறி தீர்ப்பளித்தனர்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு @BJP4TamilNadu மற்றும் தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை… pic.twitter.com/cruK5XxsQR
— K.Annamalai (@annamalai_k) May 18, 2023

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி. ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது நமது மோடி அவர்கள் மட்டும் தான். காங்கிரஸ் கட்சியாலும், அதன் கூட்டணிக் கட்சிகளாலும் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.