
பெங்களூருவில் நடைபெறவுள்ள கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கர்நாடக மாநில பொதுத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா வரும் மே 20- ஆம் தேதி அன்று பதவியேற்கவுள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 18) தொலைபேசி வாயிலாகத் தொடர்புக் கொண்டு மே 20- ஆம் தேதி அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்புக்குமாறு அழைப்பு விடுத்தனர்”. இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.