Homeசெய்திகள்சினிமா“விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போனேன்” – நடிகை கயாடு லோகர்

“விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போனேன்” – நடிகை கயாடு லோகர்

-

- Advertisement -

‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கயாடு லோகர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தெலுங்கு நடிகர் நானியுடன் ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

we-r-hiring

‘தி பாரடைஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் தனது நடிப்பு மற்றும் கதாபாத்திரம் தொடர்பாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டதாக கயாடு லோகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் சற்று திணறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் காலப்போக்கில் சினிமா துறையின் சூழ்நிலையை புரிந்துகொண்டு, எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள பழகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது என்றும், தொடர்ந்து கடினமாக உழைக்காமல் இருப்பதுதான் தவறு என்றும் கயாடு லோகர் தெரிவித்துள்ளார். விமர்சனங்களை எதிர்கொள்வது சினிமா பயணத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கயாடு லோகர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய தமிழ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஆர்.பால்கியின் முதல் தமிழ் படத்தில் வித்யா பாலன் – 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் கூட்டணி!

MUST READ