இந்தியன் 2 படத்திற்காக ஷூட்டிங் ஸ்பாட்டிலே அனிருத் இசையமைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996-ல் வெளிவந்த இந்தியன் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கமலுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்தியன் 2 திரைப்படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தடைபட்ட நிலையில் இப்போது மீண்டும் தொடங்கி இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ளது.
அதன்படி தைவான், தென்னாப்பிரிக்கா என பல நாடுகளிலும் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தின் இறுதி கட்ட படபிடிப்பானது தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சங்கரும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து இந்தியன் 2 படத்திற்கான பாடல்களை உருவாக்கும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக ம்யூசிக் ஸ்டுடியோவில் தான் ம்யூசிக் போடுவாங்க. ஆனா நம்ம ராக்ஸ்டார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய் அங்க வச்சு அசத்தலா ம்யூசிக் போட்டு ஷங்கரையே அசத்திட்டாரு. ஷங்கர் ம்யூசிக் கேட்டு அனிருத் சூப்பர் மிரட்டிடீங்க என்று பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram