பணி நிரந்தரம், வாக்குறுதி அளித்த ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் – சுமார் 8,000 ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்
கோவையில் தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், அரசு நிர்வாகம் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 8,000 ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்துள்ளனர்.

மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம்
இரண்டாவது நாளாகப் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு திரண்டு காத்திருக்கின்றனர்.
தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் நேரில் அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பல பகுதிகளில் குப்பைகள் தேக்கம்
தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன. இதனால் நகரின் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்
அதிகாரிகள் தங்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இரண்டாவது நாளாக நீடிக்கும் இந்தப் போராட்டத்தால் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
கூழ் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு – முதிய கடை உரிமையாளரை 10 அடி பள்ளத்தில் தள்ளிய மூவர்!
