
டேராடூன்- டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 25) தொடக்கி வைக்கிறார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!
இந்திய ரயில்வேத் துறையை நவீனப்படுத்தும் திட்டங்களில் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன்- டெல்லி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 25) காலை 11.00 மணிக்கு காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும். இந்த ரயில் அறிமுகமான பின்னர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் பாதைகள் அனைத்தும் 100% மின்மயமாக்கப்பட்டவழித்தடங்களாக மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரிடம் வழங்கப்படவுள்ள சோழர் காலத்து செங்கோல் குறித்த சிறப்புகள்!
இந்த விழாவில், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வேத் துறை அதிகாரிகள், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.